விழித்தெழும் நினைவுகள்
ஒரு போதும் அறிவதில்லை
விழியோர நீர்ப் படலங்களை!
**********
பள்ளியறைச் சுவர்கள்
பசியோடு தவிக்கின்றன
நாமில்லாத நாட்களில்!
**********
பூ மலர்ந்து சிரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
தொடுத்தலில்!
**********
நேற்றின் நிழல்கள்
விடுதலை அடைகின்றன
நாளையக் கனவுகளில்!
**********
நான்கு மூன்றிலும்
நடுவரி சுட்டது
கசியும் மௌனத்தில்!
எண்ணங்கள் விரிக்கும் வலை...!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
5
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
வரையாத கோடு...!
வாழ்வில் கலைந்து போகும்
நினைவுகளில் கரைந்தும் கூட
தெரிந்தே கட்டுகிறோம்
மனக்கோட்டைகளை!
நிதமும் பழகிய பொழுதுகள்
இறுதியில் நினைவுகளாய்
மீளாத் துயரில்
மீண்டெழாத நினைவுகளாய்!
கிட்டிய இதழோரச் சிரிப்பு
மீண்ட சொர்க்கமாய்
நிழலாடுகிறது
விழித் திரைகளில்!
முடிவற்று வரைந்த கோட்டில்
இலக்கற்று பயணிக்கிறேன்
எட்டிப் பார்க்காமலே நகைக்கின்றன
நான் வரையாத கோடுகள்!
ஏன் இப்பூடின்னு இங்க போய் பாருங்க
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
9
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: எதிர் கவுஜை ஈரோடு கதிர்
Subscribe to:
Posts (Atom)
