விழித்தெழும் நினைவுகள்
ஒரு போதும் அறிவதில்லை
விழியோர நீர்ப் படலங்களை!
**********
பள்ளியறைச் சுவர்கள்
பசியோடு தவிக்கின்றன
நாமில்லாத நாட்களில்!
**********
பூ மலர்ந்து சிரிக்கிறது
அடுத்தடுத்து சிறைப்படும்
தொடுத்தலில்!
**********
நேற்றின் நிழல்கள்
விடுதலை அடைகின்றன
நாளையக் கனவுகளில்!
**********
நான்கு மூன்றிலும்
நடுவரி சுட்டது
கசியும் மௌனத்தில்!
எண்ணங்கள் விரிக்கும் வலை...!
Subscribe to:
Post Comments (Atom)

5 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
விழித்தெழும் நினைவுகள்
ஒரு போதும் அறிவதில்லை
விழியோர நீர்ப் படலங்களை!
ada first kavithiaye attakasama irukuga anna
பள்ளியறைச் சுவர்கள்
பசியோடு தவிக்கின்றன
நாமில்லாத நாட்களில்!
super anna
நான்கு மூன்றிலும்
நடுவரி சுட்டது
கசியும் மௌனத்தில்!
nejama nejama puriyaliga anna
பாரதி கவிதைகள் அனைத்தும் நச் ரகம் அழகு..
அடிக்கடி எழுதுங்க
Post a Comment