வாழ்வில் கலைந்து போகும்
நினைவுகளில் கரைந்தும் கூட
தெரிந்தே கட்டுகிறோம்
மனக்கோட்டைகளை!
நிதமும் பழகிய பொழுதுகள்
இறுதியில் நினைவுகளாய்
மீளாத் துயரில்
மீண்டெழாத நினைவுகளாய்!
கிட்டிய இதழோரச் சிரிப்பு
மீண்ட சொர்க்கமாய்
நிழலாடுகிறது
விழித் திரைகளில்!
முடிவற்று வரைந்த கோட்டில்
இலக்கற்று பயணிக்கிறேன்
எட்டிப் பார்க்காமலே நகைக்கின்றன
நான் வரையாத கோடுகள்!
ஏன் இப்பூடின்னு இங்க போய் பாருங்க
வரையாத கோடு...!
Labels: எதிர் கவுஜை ஈரோடு கதிர்
Subscribe to:
Post Comments (Atom)

9 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
தலைப்பில் பிழை இருக்கிறதோ என்றொரு ஆழமான டவுட் எனக்குள் தோன்றி தோன்றி மறைந்து பின் தோன்றுகிறது!
வரையாத கோடு என்று தானே இருத்தல் வேண்டும் வரையாத கோடுகள் எப்படி!
1க்கே வழியில்லாதப்போது மற்றொன்று வரும் வழி எதுவோ?
சந்தேகங்கள் நிவர்த்தியாகும் நாள்/நேரம் எதுவோ?
m
ச்ச்சே!!
பயபுள்ள என்னை விட நல்லா எழுதுதே!
ஆஹா...
ரொம்ப நாளைக்கப்புறம் தம்பி கவிதை எழுதியிருக்காப்ல...
வாழ்த்துக்கள்
ச்ச்சே!!
பயபுள்ள என்னை விட நல்லா எழுதுதே!//
ippdilam solli ice vachuta vittuduvoma?
உண்மையிலேயே சூப்பரா இருக்கு பாஸ்! என்னன்னவோ சொல்லத் தோணுது.. ஆனா வார்த்தை தான் வரலை.
நீங்க வரையாத கோட்டில் நிலையாய் நிற்க செய்திட்டீங்க மனசை..அடிக்கடி எழுதுங்க...
// ஈரோடு கதிர் said...
ச்ச்சே!!
பயபுள்ள என்னை விட நல்லா எழுதுதே!//
கதிர் நீங்க நல்லா எழுதறீங்கன்னு சத்தியமா நான் சொல்லலீங்க..
நிஜமா சூப்பர் இந்த எதிர் கவிதை :)!
Post a Comment