சாப்பாட்டுப் பயணங்களில்...!



















பசியின் ஆற்றாமையில்
கவளம் கவளமாய் தொடங்கிய
சாப்பாட்டுப் பயணம்
இடவலமாய் கை சுழற்றி வீசுகிறது
இடையிடையே கிழிந்த இலையில்!
இறுதிவரை நிகழவேயில்லை
பசி மாற்றம்!



பசியின் துவக்கத்தில்
பருக்கைகளின் மேல்
துளிர்க்கும் வேட்கையும் விருப்பும்
ஆசையும் ஆர்வமும்
உள்ளிறங்கும் போது
முற்றிலும் நீர்த்துப்போகிறது
ருசியின் சுவைகளின்றி!


எல்லாப் பந்தியின் நிறைவிலும்
உள்நுழைவதில் பரபரப்பு வியாதியாய்!
ஒரு முறையாவது பந்தியில்
முதலில் உட்கார வேண்டும்
சங்கல்பம் தோன்றி மறைகிறது
வழக்கம் போல முட்டி மோதி
இறுதியாய் இடம் பிடிக்கையில்!






படிச்சிட்டு திட்ட இல்லைன்னா பாராட்ட நினைக்கிறவங்க....அப்படியே இங்க வாங்க!

5 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

கல்யாணமண்டப வாசல்ல நிக்கும் போதே சந்தேகபட்டேன்!

:)

said...

தம்பியை கடைசிபந்திக்கு கூட உள்ள வுட மறுத்துவிடும் இந்த தமிழ்ச்சூழல் என்னை வெகுவாக ஆத்திரப்படுத்தி,கோவப்படுத்தி - படுத்தி எடுக்கிறது !

தம்பி அதான் தொரத்துறானோல்ல பிறகு ஏன் மண்டபம் மண்டபமா திரிஞ்சுகிட்டிருக்கீங்க? :((

said...

சாப்பாட்டு பயணங்கள் மிக அருமை

இருந்தாலும் ஆயில்யனை வழிமொழிகிறேன்

said...

பாரதி

எதிர்... சுவையா இல்ல!!

ஊருக்கு வந்துட்டுப் போனதில் கொஞ்சம் டல் அடிக்குது

said...

//ஒரு முறையாவது பந்தியில்
முதலில் உட்கார வேண்டும்
சங்கல்பம் தோன்றி மறைகிறது
வழக்கம் போல முட்டி மோதி
இறுதியாய் இடம் பிடிக்கையில்!//

ஹா..ஹா... கவிதையிலும் கலக்கல் மாம்ஸ்:)