பனி படர்ந்த காலை
கரிய இருள் நீங்கி
கதிரவனின் கதிர்கள்
சூழ்ந்திருந்த வேளை!
தேவை இல்லாத வேளையில்
வருகை
அசாதரணமான வரவு
வழக்கம் போலில்லாமல்
ஆனால்
உள்ளுணர்வு உணர்த்திற்று
உன்னிடமிருந்த
கந்தக வாசனையை
கதகதப்பாய் ஆற்று நீர்!
உற்றுப் பார்த்தபோது
நீர் பரப்பில்
கேசங்கள் பறந்தன
அழகாய்!
ஆரவாரம் இல்லாமல் பாய்ந்த நீர்
செல்லும் திசையில் கேசங்களையும்
கொஞ்சம் கொஞ்சமாக
கொண்டு போவது
தாமதமாகவே உணரப்பட்டது!
கேசங்கள் உதிர்தலிலும்
கூடுதலாய் பிரகாசிக்கிறது
முன் நெற்றி
கதிரவனின் கதிர்கள் தழுவலில்!
இந்தப் பதிவு ஏன்?என்னன்னு புரியாதவங்க இங்க வந்து பாருங்க!
கூடுதலாய் பிரகாசித்தது...!
Labels: எதிர்பதிவு கலாய்த்தல் கதிர்
Subscribe to:
Post Comments (Atom)

26 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
//உற்றுப் பார்த்தபோது
நீர் பரப்பில்
கேசங்கள் பறந்தன
அழகாய்!//
ஏங்க...அது சவுரி முடியா!!!!!????
இனிமே தொப்பி போட்டுக்குறேன்!!!
என்னையும் மதிச்சு ஒரு பயபுள்ள எதிர் கவுஜ போடுதுன்னா....
என்னமோ போங்க ஒலகத்துல நெஜமாவே நல்லவங்க இருப்பாங்க போல
//கூடுதலாய் பிரகாசிக்கிறது
முன் நெற்றி
கதிரவனின் கதிர்கள் தழுவலில்! //
அடடா... வழுக்கைத்தலைக்கு இத்தனை வர்ரணையா.... சூப்பருங்க.... ஆமா..அடிக்கடி கதிரு..கதிருன்னு சொல்றீங்களே அது ஆருங்க.....
//ஈரோடு கதிர் said...
இனிமே தொப்பி போட்டுக்குறேன்!!!//
க்க்க்கும்.... இத அப்பவே செஞ்சிருக்கலாம்ல....
கதிர் முடிய சை விரலை புடிச்சி அவர் கண்ணையே குத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மு.இ.ம.ச. மூத்த உறுப்பினர்.
/
வானம்பாடிகள் said...
கதிர் முடிய சை விரலை புடிச்சி அவர் கண்ணையே குத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். மு.இ.ம.ச. மூத்த உறுப்பினர்./
ஹா...ஹா...ஹா...மன்றத்து பேரு சூப்பரு:))
/
க.பாலாசி said...
//உற்றுப் பார்த்தபோது
நீர் பரப்பில்
கேசங்கள் பறந்தன
அழகாய்!//
ஏங்க...அது சவுரி முடியா!!!!!????/
அவ்வ்வ்வ்....சவுரி வேற உண்டா...இது தெரியாம போச்சே:))
;-)
க.பாலாசி said...
//கூடுதலாய் பிரகாசிக்கிறது
முன் நெற்றி
கதிரவனின் கதிர்கள் தழுவலில்! //
அடடா... வழுக்கைத்தலைக்கு இத்தனை வர்ரணையா.... சூப்பருங்க.... ஆமா..அடிக்கடி கதிரு..கதிருன்னு சொல்றீங்களே அது ஆருங்க.....//
முள்ளம்பன்னித்தலையனுக்கு லொல்லப்பாரு:))
உள் குத்து இருக்கும்ன்னு நினைச்சேன்.. ஆனா இவ்வளவு ஆழம்ன்னு தெரியலையே? கதிர் மேல ரொம்ப 'பாசமோ"?
பல பேரோட கண்ணுக்குள்ள கைய விட்டு ஆட்டிய கதிரின் கண்ணுக்குள் கையை விட்டு ஆட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
//நிஜமா நல்லவன்//
நாட்டாமை ப்ளாக் தலைப்ப மாத்தச் சொல்லு...
//ஈரோடு கதிர் said...
என்னையும் மதிச்சு ஒரு பயபுள்ள எதிர் கவுஜ போடுதுன்னா....
என்னமோ போங்க ஒலகத்துல நெஜமாவே நல்லவங்க இருப்பாங்க போல//
ஆகா என்னே பெருந்தன்மை... கதிர்.. இவங்க தலைப்பை மாத்தினதும் நீங்க இவங்க தலைப்பை உங்க ப்ளாக்கிற்கு வைக்கவும்..
(ச்சே.. ச்சே... நல்லவன்னு சொல்லிட்டான்னு சொல்லி அழுவ எல்லாம் கூடாது..)
/
கலகலப்ரியா said...
பல பேரோட கண்ணுக்குள்ள கைய விட்டு ஆட்டிய கதிரின் கண்ணுக்குள் கையை விட்டு ஆட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
//நிஜமா நல்லவன்//
நாட்டாமை ப்ளாக் தலைப்ப மாத்தச் சொல்லு... /
அவ்வவ்...நீங்க கலகலப்ரியாவா??? இல்ல கலகப்ரியாவா:)))
|| நிஜமா நல்லவன் said...
/
கலகலப்ரியா said...
பல பேரோட கண்ணுக்குள்ள கைய விட்டு ஆட்டிய கதிரின் கண்ணுக்குள் கையை விட்டு ஆட்டுவதை வன்மையாகக் கண்டிக்கிறோம்..
//நிஜமா நல்லவன்//
நாட்டாமை ப்ளாக் தலைப்ப மாத்தச் சொல்லு... /
அவ்வவ்...நீங்க கலகலப்ரியாவா??? இல்ல கலகப்ரியாவா:)))||
ஆகா... நம்ம இடுகைத் தலைப்பையே மாத்திடுவாய்ங்க போலருக்கே... இந்த டகால்டி டிகால்ட்டி வேல எல்லாம் வேணாம்.. இந்தக் கேள்விய இதோட 657893201 பேரு கேட்டதால... நான் ஒன்னியும் தனியா விளக்கம் சொல்லத் தேவையில்லையென்பதைச் சொல்லிக்கொ'ல்'கிறேன்..
ஹா! போட்ட போட்டில பயந்து போய் ஓடிரிச்சி பாலாசி பயபுள்ள. அந்த பயம் இருக்கணும்டி:))
/கலகலப்ரியா said...
..... நான் ஒன்னியும் தனியா விளக்கம் சொல்லத் தேவையில்லையென்பதைச் சொல்லிக்கொ'ல்'கிறேன்../
ரௌத்ரம் மட்டுமே பழகிக் கொண்டிருப்பது இப்படி கொல்லத்தானோ:)))
நிஜமாவே அவ்வளவு நல்லவரா நீங்க
//
ரௌத்ரம் மட்டுமே பழகிக் கொண்டிருப்பது இப்படி கொல்லத்தானோ:))) //
அடச்சே.. அதுக்கு நம்ம கிட்ட ஆயிரத்தெட்டு வழி இருக்குப்பா.. இது ஒரு மெதட்... அம்புட்டுதேன்..
சரி கும்மியிலிருந்து இப்போதைக்கு விடைபெற்றுக்கொ'ல்'கிறேன்.. 0))
உள்ளுணர்வு உணர்த்திற்று
உன்னிடமிருந்த
கந்தக வாசனையை
கதகதப்பாய் ஆற்று நீர்!]]
அருமை நல்லவரே!
நான் எப்போதும் சொல்வது தான், சீக்கிரம் ஊருக்கு ...
//கந்தக வாசனையை
கதகதப்பாய் ஆற்று நீர்!//
ஒழுங்கா குளிக்கலன்னா... இப்பிடித்தான் ஏதாவது ஏடாகூடமா வாசனை வரும்
இத விட கதிரண்ணாவை கும்மவே முடியாதுங்கிற அளவுக்கு.. கவிதைல கும்மிட்டீங்க.. இனிமேல் நான் என்ன சொல்ல:-)
என்னையும் மதிச்சு ஒரு பயபுள்ள எதிர் கவுஜ போடுதுன்னா....//
கவுஜ அதுலயும் எதிர் கவுஜல தம்பியை அசைச்சுக்க யாராலும் முடியாது.
ஹா...ஹா...ஹா..
அவ்வ்வ்!
நான் இங்க வர்றத்துகோசம் வந்தனா? அப்ப... ஒரே கிளார் அடிக்குது!
கேசம்னா - மயிரா? ஓ இப்பதான் புரியுது.
:)
pirakasamaai oru 25:)
வணக்கம்
நண்பர்களே
உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.
உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்
www.thalaivan.com
Post a Comment