கோடை மழை...!


நாசியை வருடிச்செல்லும்
நறுமணமாய் மண்வாசனை
கண்கொள்ளாக் காட்சியாய்
வானவில்லின் ஜாலம்

சாரலாய் தூறாமல்
சடசடவெனப் பெய்யும் மழை
மழையின் சுவடுகளினூடே
மஞ்சள் வெயிலின் சிரிப்பு

மழையும் வெயிலும் ஒருசேர
வாண்டுகளின் குதியாட்டம்
சற்றே பூமித்தாயை முத்தமிட்டாலும்
கோடையின் சுகமே கோடை மழை தானே?

7 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:

said...

மெட்ராசுல மழைன்னா? சூப்பர்! :)

said...

அருமை.. கோடை மழையின் குளிர்வாய் இனிக்கிறது

said...

இப்பதான் நீயூஸ் பார்த்தேன் நாட்டுல மழையாம்ல்ல...அதுக்குள்ள கவிதை போட்டு கலக்குறிங்கண்ணே;)

said...

நிஜமா நல்லா இருக்கு

said...

மழையின் சுவடுகளினூடே
மஞ்சள் வெயிலின் சிரிப்பு]]


அண்ணே நீங்க ஒரு இரசனைக்காரர் :)

said...

ஆஹா..இது நல்மழை..
இங்கே இன்னிக்கு ரியாத்ல பெய்தது பாருங்க ஒரு ஆலங்கட்டி மழை...

said...

sooperu:)