
Photo : Thanks to Desiknitter's Flickr Photostream.
பல வண்ணங்களில்
சுருள் சுருளாக
சுற்றப்பட்ட வயர்கள்!
ஓய்வான நேரங்களில்
முதல் முடிச்சுடன்
தொடங்கிடும் பின்னல்!
சில நாட்கணக்கில்
சில வாரக்கணக்கில்
அழகிய வேலைப்பாடுகளுடன்
எழிலாய் ஜொலிக்கும்!
மளிகைக்கடை செல்கையில்
முன் தொங்கும்
மிதிவண்டியில்!
வெளியூர் பிரயாணங்களில்
தவிர்க்கவே முடியாமல்
சுமைகள் தாங்கி
உடன் வரும்!
மஞ்சள் பை
காணாத தருணங்களில்
பள்ளி கூட வந்ததுண்டு!
கேரிபேக் அலையில்
அடித்து சென்றது
வயர்கூடைகள் மட்டுமல்ல
அழகிய கைத்தொழிலும் தான்!
வயர்கூடை!
Labels: புலம்பல்ஸ்
Subscribe to:
Post Comments (Atom)

25 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
மீ த பஸ்டேய்ய்ய்ய்ய்! :))
//ஓய்வான நேரங்களில்
முதல் முடிச்சுடன்
தொடங்கிடும் பின்னல்!
சில நாட்கணக்கில்
சில வாரக்கணக்கில்
அழகிய வேலைப்பாடுகளுடன்
எழிலாய் ஜொலிக்கும்!///
நான் ஸ்கூல்லுக்கு மதியம் சாப்பாடு கூடையில தான் வைச்சி எடுத்துட்டுபோவேன் அப்பத்தான் அலுங்காம குலுங்காம எடுத்துட்டு போகலாம்ன்னு :))
வீட்ல சனி ஞாயிறு வீக் எண்ட் ஸ்பெஷல் அப்பல்லாம் கூடை பின்னுறதுதான் !
கைவினைக்கு
செய்வினை
கலையுணர்வுள்ள மனிதனை
தோற்கடித்த கடுதாசிப் பை
உயர்வானவர்கள்
பின்னிய
வயர் கூடை
நவீன உலகில்
பிளாஸ்டிக் மனிதர்கள்
பிளாஸ்டிக் சிரிப்பு
பிளாஸ்டிக் பை
நன்று
கேரிபேக் அலையில்
அடித்து சென்றது
வயர்கூடைகள் மட்டுமல்ல
அழகிய கைத்தொழிலும் தான்!\\
சரிதாண்ணே!
எனக்கு இந்த கூடை பின்னத்தெரியும், எங்க பாட்டி சொல்லி கொடுத்தாங்க!
\கேரிபேக் அலையில்
அடித்து சென்றது
வயர்கூடைகள் மட்டுமல்ல
அழகிய கைத்தொழிலும் தான்!\\
கலக்கல் வரிகள் அண்ணே...இதை வச்சே ஒரு சிறுகதை எழுதலாம் ;)
கவிதை நெம்ப சூப்பர்..!! இனி எல்லா பதிவர்களும் ஒயர் கூடை வாங்க ஆரம்பிச்சுருவாங்க...!!!
என் பள்ளி நாட்களில் என் அம்மா பின்னிய வயர்கூடைதான் புத்தகப் பை! ஆனா இப்ப... போயே போச்சு! ஆனால் இன்றும் கிராமப்புறங்களில் அசைக்க முடியாத ஒன்றாகவே இருக்கிறது என்பது நிதர்சனம்!
10
வித்தியாசமான கவிதை...ஒரு காலத்துல மாஞ்சு மாஞ்சு பின்னுனது நினைவுக்கு வந்துருச்சு....
வயர்க்கூடையை ஞாபகப்படுத்திவிட்டீர்கள் நண்பரே!!
romba azhaga irukku lines:) :)
கேரிபேக் அலையில்
அடித்து சென்றது
வயர்கூடைகள் மட்டுமல்ல
அழகிய கைத்தொழிலும் தான்!///
நல்ல வரிகள்
கலக்கல்
//கேரிபேக் அலையில்
அடித்து சென்றது
வயர்கூடைகள் மட்டுமல்ல
அழகிய கைத்தொழிலும் தான்!//
அருமை! இழந்தவை இன்னும் பல! நீங்கள் பாட்டு எழுதுவீங்கன்னு சொல்லவே இல்லை.
@ஜோதிபாரதி
//நவீன உலகில்
பிளாஸ்டிக் மனிதர்கள்
பிளாஸ்டிக் சிரிப்பு
பிளாஸ்டிக் பை//
:-(
பேரன்ஸ்ட் க்ளப்ல வாழ்த்து மட்டும் சொல்லிட்டீங்க. ஓட்டு போட்டு அங்கீகரியுங்க..
nalla iruku anna
கவித கவித.
இழந்தவைகள் பல... சில நினைவில் நிற்கின்றன..
இழந்தவைகளின் நினைவிழந்தும் வாழ்க்கை நடத்துகிறோம் நினைவூட்ட ஆளில்லாமல் :(
epdi ipdi yosikeerenga engalukum konjam solli tharathu:(
//கவிதை நெம்ப சூப்பர்..!! இனி எல்லா பதிவர்களும் ஒயர் கூடை வாங்க ஆரம்பிச்சுருவாங்க...!!!//
Nallavar pathivuku avlo mariyathai unduna :) avar punniyathula namma Boomi nalla irukumnu nenaikeren:)
அண்ணா வயர்கூடை சூப்பர் இருக்கு ....
ஆனாலும் உங்களுடைய எளிமையான கவிதை நடை அர்த்தம் பொதிந்தது
வாழ்த்துக்கள் .... அண்ணா ...!!
அடுத்த பதிவு எப்போ தம்பி???
மீ த வெயிட்டிங்
me the 25th
Post a Comment