1 . உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது? உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா ?
பதிவுலகில் நுழைந்த போது நிறைய பேர் புனை பெயரிலேயே எழுதிக்கொண்டிருப்பதை பார்த்து நானே வைத்து கொண்ட பெயர் தான். நல்லவன் என்று தான் பெயர் வைக்க நினைத்தேன். எதற்கும் இதே பெயரில் வேறு யாரனும் இருக்கிறார்களா என்று கூகுளில் தேடியதில் வேறு ஒருவர் இருந்ததால் நிஜமா நல்லவன் என்று வைத்துக்கொண்டேன். பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்லை:)
2. கடைசியாக அழுதது எப்பொழுது?
தினம் தினம் தான் அழுகிறேன்.கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அரிந்த போது.
3. உங்களோட கையெழுத்து உங்களுக்கு பிடிக்குமா?
தலை எழுத்து நல்லா இல்லாதவங்களுக்கு கையெழுத்து நல்லா இருக்கும் என்று சொல்லுவாங்க. என்னோட கையெழுத்து ரொம்ப நல்லா இருக்கும். பிடிக்கும் என்று நினைக்குறீங்களா?
4. பிடித்த மதிய உணவு என்ன?
சாப்பிடாமலே உயிர் வாழ வழி இருக்கிறதா என்று யோசிச்சிட்டு இருக்கேன். இதிலே பிடித்த உணவு என்று எதை சொல்வது?
5. நீங்கள் வேறு யாருடனாவது உங்களோட நட்பை உடனே வச்சுக்குவீங்களா?
திருக்குறளில் நட்பு அதிகாரம் தேடி படிச்சி தெளிஞ்சி நட்பு வச்சிக்கிற அளவுக்கு பொறுமை எல்லாம் இல்லைங்க. உடனே தான்!
6. கடலில் குளிக்க பிடிக்குமா....அருவியில் குளிக்க பிடிக்குமா?
கடலில் ஏனோ எனக்கு குளிக்க பிடிப்பதில்லை. அருவியில் குளிக்க மிக பிடிக்கும்.
7. முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்
8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : எந்த ஒரு செயலையும் நேர்த்தியாக செய்வது.
பிடிக்காத விஷயம் : முன் கோபம்
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : எதையும் மனதில் வச்சுக்காம வெளிப்படையா பேசுவது, திருமணத்திற்கு முன் சுடு தண்ணி கூட போட தெரியாமல் இருந்துவிட்டு இப்போது எல்லா விதமான சமையலையும் சுவையாக செய்வது.
பிடிக்காத விஷயம் : மனைவி என்றில்லை யாராக இருந்தாலும் அவரிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்லலாம்....பிடிக்காத விஷயங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லிவிடுவேன்!
10. யார் பக்கத்துல இல்லாம இருக்குறதுக்கு வருந்துகிறீர்கள் ?
உறவுகள்
11. இதை எழுதும் போது என்ன வர்ண ஆடை அணிந்து உள்ளீர்கள் ?
இப்படி ஒரு கேள்வி தேவையா??
12. என்ன பார்த்து/கேட்டுக் கொண்டு இருக்குறீங்க ?
கணிணித்திரையை பார்த்துக்கொண்டு இருக்கிறேன். பக்கத்தில் மின்விசிறியின் மெல்லிய சத்தம் மட்டுமே கேக்கிறது.
13. வர்ணப் பேனாக்களாக உங்களை மாற்றினால் என்ன வர்ணமாக உங்களுக்கு ஆசை?
'பேனாக்களாக' என்பதால் வானவில்லின் அனைத்து நிறங்களாகவும்.
14. பிடித்த மணம்?
கிராமத்தில் எங்கவீட்டு பின்புறத்தில் மல்லிகை தோட்டம் உண்டு. குண்டுமல்லி வாசம் தான் இப்பவும் எப்பவும் மிகப்பிடித்த ஒன்று.
15.நீங்க அழைக்கப் போகும் பதிவரிடம் உங்களுக்கு பிடித்த விஷயம். அவரை அழைக்க காரணம் என்ன ?
நான் எழுத அழைப்பது இவரை தான். இவரிடம் மிக பிடித்த விஷயம் எனக்கு புரியாத மாதிரி எழுதுவது. அழைக்க காரணம் நீங்களாவது படிச்சி புரிஞ்சிகிட்டு எனக்கு சொல்லுவீங்க என்ற ஆசை தான்!
16. உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவில் உங்களுக்குப் பிடித்த பதிவு ?
ஜோதிபாரதி மற்றும் ஆயில்யன் இருவருமே என்னை எழுத அழைத்து உள்ளனர். ஜோதிபாரதியின் கவிதைகள் மிகப்பிடிக்கும். தல தமிழ்பிரியன் சொன்னது போல ஆயில்ஸ் அவர்களின் 1ம் இல்லை பதிவுகள் மிகப்பிடிக்கும்.
17. பிடித்த விளையாட்டு?
வாழ்க்கையே ஒரு மிகப்பெரிய விளையாட்டா இருக்கு. அதையும் தாண்டி பிடித்த விளையாட்டு கேரம் மற்றும் செஸ்.
18. கண்ணாடி அணிபவரா?
ஒற்றை தலைவலியால் பத்தாவது படிக்கும் போது மிக அவதிப்பட்டேன். அப்போது அணிந்திருக்கிறேன். இப்போது இல்லை.
19. எப்படிப்பட்ட திரைப் படம் பிடிக்கும்?
இந்தப்படத்தை பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று நினைக்க தோன்றாத எல்லா படமும் பிடிக்கும்.
20. கடைசியாகப் பார்த்த படம்?
சர்வம்(கொடுமை தாங்கல....பாதில எழுந்து வந்துட்டேன்)
21. பிடித்த பருவ காலம் எது?
கார் காலம் மற்றும் குளிர் காலம்
22. என்ன புத்தகம் படித்துக் கொண்டு இருக்கீங்க?
தற்சமயம் எந்தப்புத்தகமும் படித்துக்கொண்டிருக்கவில்லை.
23. உங்கள் டெஸ்க்டொப்-ல் இருக்கும் படத்தை எத்தனை நாளுக்கு ஒரு நாள் மாற்றுவீர்கள்?
நாள் கணக்கு எல்லாம் இல்லை. நான் எடுக்கும் புகைப்படங்களில் அத்தி பூத்தது போல எப்போதாவது ஒரு சில படங்கள் மிக நன்றாக வரும். அப்போது மட்டுமே மாற்றுவேன்.
24. பிடித்த சத்தம் ? பிடிக்காத சத்தம்?
பிடித்தது குழந்தைகளின் சிரிப்பு மற்று அதிகாலை குயிலோசை.
பிடிக்காதது எரிச்சல் படுத்தும் தேவையற்ற ஹாரன் சத்தம்.
25. வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக பட்ச தொலைவு?
சிங்கப்பூர்
26. உங்களுக்கு ஏதாவது தனித் திறமை இருக்கிறதா?
வடிவேலு சொல்லுற மாதிரி தான்......இருக்கு....ஆனா இல்லை:)
27. உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தனியா பதிவு போடுற அளவுக்கு லிஸ்ட் ரொம்ப பெருசு...:)
28. உங்களுக்கு உள்ளே இருக்கும் சாத்தான்?
சாத்தான்கள் என்று கேட்டு இருக்கணும். சாத்தான் என்று கேட்டதால நான் ஒரு சாத்தானை மட்டும் சொல்லப்போக மற்ற சாத்தான்கள் எல்லாம் என்மேல கொலைவெறியோட பாய்ஞ்சா என்ன பண்ணுறது????
29. உங்களுக்கு பிடித்த சுற்றுலா தலம்?
எங்க வீட்டு மொட்டை மாடி தான்.
30. எப்படி இருக்கணும்னு ஆசை?
எப்படி எல்லாம் இருக்க கூடாதோ அப்படி எல்லாம் இல்லாமல் இருக்கணும் என்ற ஆசை தான்.
31.மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
எப்படியாது வம்புல மாட்டி விட்டுடுற எண்ணத்திலேயே கேட்ட கேள்வி மாதிரி இருக்கு. எதை செஞ்சாலும் மனைவி முன்பே செய்து நாலு மொத்து வாங்கினாலும் எதுவுமே நடக்காத மாதிரி இருந்துடுவோம்ல..:)
32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கானல் நீர்.
பாடாய் படுத்தும் 32!
Labels: தொடர் பதிவு
Subscribe to:
Post Comments (Atom)

49 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
Firstae :))))
//கூகுளில் தேடியதில் வேறு ஒருவர் இருந்ததால் நிஜமா நல்லவன் என்று வைத்துக்கொண்டேன்.//
Appo andha innoruthar poyya nallavarnu neengalae mudivu panniteengala !!!!
//கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அறிந்த போது.//
Kudumba isthar vaazhkkaila idhellam sagajamappa :D
//தலை எழுத்து நல்லா இல்லாதவங்களுக்கு கையெழுத்து நல்லா இருக்கும் என்று சொல்லுவாங்க. //
Ultala soldreenga? kaiyezhuthu nalla irundha thalaiezhuthum nalla irukkumnu illa solvaanga?? illaya?
//சாப்பிடாமலே உயிர் வாழ வழி இருக்கிறதா என்று யோசிச்சிட்டு இருக்கேன். //
sondha samayal saapidara effecta ;)
//திருக்குறளில் நட்பு அதிகாரம் தேடி படிச்சி தெளிஞ்சி நட்பு வச்சிக்கிற அளவுக்கு பொறுமை எல்லாம் இல்லைங்க. உடனே தான்!//
Superu.. romba theliva irukkeenga :)))))
//பிடிக்காத விஷயங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லிவிடுவேன்!//
:))))))))))) Nalla pazhakkam.. keep it up :D
//இவரிடம் மிக பிடித்த விஷயம் எனக்கு புரியாத மாதிரி எழுதுவது. அழைக்க காரணம் நீங்களாவது படிச்சி புரிஞ்சிகிட்டு எனக்கு சொல்லுவீங்க என்ற ஆசை தான்!//
LOL :)))))))
//
வடிவேலு சொல்லுற மாதிரி தான்......இருக்கு....ஆனா இல்லை:)//
:)))))))))))))))))))))))
//சாத்தான் என்று கேட்டதால நான் ஒரு சாத்தானை மட்டும் சொல்லப்போக மற்ற சாத்தான்கள் எல்லாம் என்மேல கொலைவெறியோட பாய்ஞ்சா என்ன பண்ணுறது????/
Mudiyala.... avvvvvvvvvvvvvvvvvv
ரொம்ப சந்தோஷம் தம்பி :)
//நான் எழுத அழைப்பது இவரை தான். இவரிடம் மிக பிடித்த விஷயம் எனக்கு புரியாத மாதிரி எழுதுவது. அழைக்க காரணம் நீங்களாவது படிச்சி புரிஞ்சிகிட்டு எனக்கு சொல்லுவீங்க என்ற ஆசை தான்!//
அடப்பாவி தம்பி!
அவுரு சோனியாவுக்கு சொந்தக்கார பயபுள்ளையாம் இப்ப போட்டிருக்கிற போஸ்ட்ல “என்கிட்ட நெறையா கல்லு இருக்குன்னு மெசேஜ் கொடுத்திருக்காரு”
ஏன் தம்பி உனக்கு வூட்ல வாங்குற அடியே போதும் இதுல ஏன் ஊர்ல உலகத்துல போய் அடி வாங்கிட்டு வரணும்ன்னு ஆசைப்படுற?????
//
தினம் தினம் தான் அழுகிறேன்.கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அறிந்த போது.//
ஓ ஆம்லேட் சனி ஸ்பெஷலா
ரைட்டு!
//
கானல் நீர்.//
Ippadi sogama mudichiputteenga :(
//கானல் நீர்.///
ஆமாங்க தம்பி !
எப்படி நாங்க உங்களை நல்லவன்னு நினைச்சுக்கிட்டிருக்கோமோ அதே மாதிரிதானே....!
நாம நினைக்கிறது 1 நடக்கிறது வேற 1
//G3 said...
//
கானல் நீர்.//
Ippadi sogama mudichiputteenga :(//
ம்ஹுக்கும்!
அவரு சோகமா முடிச்சாலும் ஆம்லெட் ரெடியாகிடுச்சு!
நீங்க ஃபீல் பண்ணாம போங்க பாஸ்!
//முதலில் ஒருவரைப் பார்க்கும் போது எதை கவனிப்பீர்கள்?
கண்கள்//
தம்பி என்கிட்ட மனைவியின் கண்கள் அப்படின்னுல்ல சொன்னீங்க - அவுங்க சைகை காமிச்சாத்தான் மத்தவங்களை ஏறெடுத்து பார்ப்பேன்னு சொன்னது ஆப் த ரெக்கார்ட்டா? சரி சரி நான் யார்க்கிட்டயும் சொல்லலை !
//பிடிக்காத விஷயம் : மனைவி//
தம்பிக்கு ஆனாலும் நொம்ப்பா தைரியம் சாஸ்தி !
நீங்கோ மெய்யாலுமே நல்லவர்தான்
நாங்க நம்புறோம்!
திருமணத்திற்கு முன் சுடு தண்ணி கூட போட தெரியாமல் இருந்துவிட்டு இப்போது எல்லா விதமான சமையலையும் சுவையாக செய்வது.\\
சொல்லிக்கொடுத்தது நீங்க தானோ!
இந்தப்படத்தை பார்க்காமலே இருந்திருக்கலாமோ என்று நினைக்க தோன்றாத எல்லா படமும் பிடிக்கும்.\\
உங்க டச் ...
வடிவேலு சொல்லுற மாதிரி தான்......இருக்கு....ஆனா இல்லை\\
அத சொன்னது வடிவேலு இல்லையே
உங்களுக்கு பிடிச்ச வலைப்பூ
நல்லாருங்கண்ணே!
(படிச்சன்னு கேட்கலையே
பிடிச்சன்னு தானே கேட்டாங்க - அப்ப சரிதான்)
//பிடிக்காத விஷயம் : மனைவி என்றில்லை யாராக இருந்தாலும் அவரிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்லலாம்....பிடிக்காத விஷயங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லிவிடுவேன்!//
அருமையான பதில்...
வாழ்க்கையே சிறந்த விளையாட்டு
வாழ்க்கை காணல் நீர்.
என்னவோ போங்க தத்துவார்த்தமா இருக்குதுங்கோ!
//எப்படியாது வம்புல மாட்டி விட்டுடுற எண்ணத்திலேயே கேட்ட கேள்வி மாதிரி இருக்கு. எதை செஞ்சாலும் மனைவி முன்பே செய்து நாலு மொத்து வாங்கினாலும் எதுவுமே நடக்காத மாதிரி இருந்துடுவோம்ல..:)//
ரசிக்க வைத்த பதில்...
:)
:))
கிகிகி.. நீங்க நெஜமாவே நல்லவரு தாங்க :)
:))
ஒரு மாதிரி அண்ணனை இவ்வளவு எழுதவச்சுட்டாங்கப்பா அது போதும்..
:))
very nice
/பேருக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லைன்னு நீங்க நினைச்சா அதுக்கு நான் ஒண்ணும் பண்ணுறதுக்கு இல்லை:)/
நம்புகின்றேன்
நீங்கள் சொன்ன அதற்கு மேல்
appeal உண்டா !!!!!!!!!!!!!!!
என நீங்க நிஜமாக நல்லவருங்க
/2. கடைசியாக அழுதது எப்பொழுது?
தினம் தினம் தான் அழுகிறேன்.கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அரிந்த போது./
அப்பாப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்ப்
/32. வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கானல் நீர்.
/
short and sweet
திருக்குறள் எல்லாம் கொஞ்சம் தள்ளி நிற்க வேண்டும்
கலக்கல் தல!
கலக்கிட்டேள்...
அதிலும் இந்த பதில் பிரமாதம் போங்கோ... நல்லாவே சமாளிச்சுட்டேள்.
// மனைவி இல்லாம செய்ய விரும்பும் ஒரே காரியம் ?
எப்படியாது வம்புல மாட்டி விட்டுடுற எண்ணத்திலேயே கேட்ட கேள்வி மாதிரி இருக்கு. எதை செஞ்சாலும் மனைவி முன்பே செய்து நாலு மொத்து வாங்கினாலும் எதுவுமே நடக்காத மாதிரி இருந்துடுவோம்ல..:)//
// 2. கடைசியாக அழுதது எப்பொழுது?
தினம் தினம் தான் அழுகிறேன்.கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அரிந்த போது.// சேம் ப்ளட்... நல்லா பொடிப் பொடியா அரிஞ்சு கொடுங்கோ..
// 4. பிடித்த மதிய உணவு என்ன?
சாப்பிடாமலே உயிர் வாழ வழி இருக்கிறதா என்று யோசிச்சிட்டு இருக்கேன். இதிலே பிடித்த உணவு என்று எதை சொல்வது?
//
இது ரொம்ப நல்லா இருக்கு
பதில்களில் எல்லாம் உங்கள் தெளிவான ஞானம் பளிச்சிடுது தல.. ;-)
//வாழ்வு பற்றி ஒரு வரி சொல்லுங்க?
கானல் நீர்.//
:-))))
ஆகா..நீங்களும் பதில் சொல்லிட்டிங்களா!!....
கலக்கல் ;)
தல
திருக்குறளை விட சொற்பமா சொல்லியிருக்கீங்க :)
கடைசீல சொல்லியிருக்கிற கானல் நீர் ரித்திஷ் படமாச்சே
. கடைசியாக அழுதது எப்பொழுது?
தினம் தினம் தான் அழுகிறேன்.கடைசியா என்பதால் சற்று முன் ஆம்லெட்டுக்கு வெங்காயம் அரிந்த போது.//
ஓ செல்ஃப் சமையலா?
//சாப்பிடாமலே உயிர் வாழ வழி இருக்கிறதா என்று யோசிச்சிட்டு இருக்கேன்.
கண்டுபிடுச்சா எனக்கும் சொல்லுங்க பாஸ். பாதி வாழ்நாளும் என்ன சமைக்கலாம்ன்னு யோசிச்சே போயிடுது. ( அதுதான் சமைக்க நேரமே கிடைக்கமாட்டேங்குது)
//8. உங்க கிட்ட உங்களுக்கு பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன ?
பிடிச்ச விஷயம் : எந்த ஒரு செயலையும் நேர்த்தியாக செய்வது.
பிடிக்காத விஷயம் : முன் கோபம்
9. உங்க சரி பாதி கிட்ட உங்களுக்கு பிடித்த பிடிக்காத விசயம் எது?
பிடிச்ச விஷயம் : எதையும் மனதில் வச்சுக்காம வெளிப்படையா பேசுவது, திருமணத்திற்கு முன் சுடு தண்ணி கூட போட தெரியாமல் இருந்துவிட்டு இப்போது எல்லா விதமான சமையலையும் சுவையாக செய்வது.
பிடிக்காத விஷயம் : மனைவி என்றில்லை யாராக இருந்தாலும் அவரிடம் பிடித்த விஷயங்களை வெளியில் சொல்லலாம்....பிடிக்காத விஷயங்களை அவர்களிடம் மட்டுமே சொல்லிவிடுவேன்!//
கலக்கலான பதிவு, பதில்கள்
உங்க குணாதிசயத்தை போட்டு வாங்கிய திருப்தியுடன் அமைகிறேன்.
நன்றி!
32 கே/ப தொடர் விளையாட்டு ஒழிக...:-)))
பவம் சார் நீங்க...!!! இந்த 32 கொடுமையில ... ரத்தக் கண்ணீரே வடுச்சுடீங்க போல....!!!!!
நீங்க கொடுத்த சுட்டி
ஆஹா! நீங்க ரொம்ப சுட்டி
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
:)) :)) :)) :)) :))
//உங்களால் ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு விஷயம்?
தனியா பதிவு போடுற அளவுக்கு லிஸ்ட் ரொம்ப பெருசு...//
இம்புட்டு பேரையாண்ணே உஷார் பண்ணி வச்சிருக்கிங்க? கல்யாணம் ஆகிட்டதால இவங்கள எல்லாம் ஏத்துக்க முடியலையாண்ணே? :))
Post a Comment