எங்கள் கிராமத்தில் காடு மேடு எல்லாம் அலைந்து திரிந்து பட்டாம் பூச்சிகளை பிடித்து விளையாடிய சந்தோஷமான தருணங்களின் நினைவுகளை மீண்டும் நினைக்க வைத்து எனக்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்த வாடிய பயிர்களை கண்டபோது போது எல்லாம் வாடிய அத்திவெட்டி எழுச்சி நாயகன் ஜோதி பாரதி அவர்களுக்கு நன்றி.
நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட ________ வியாதிகளை கண்டால் என்று தனது உள்ளக்குமுறல்களை அத்திவெட்டி அலசலில் கொட்டிவந்தாலும் ஜோதிபாரதிக்கு பெருமை சேர்ப்பது ஈரமும் வீரமும் செறிந்த இவரது கவிதைகள் தான். தொடர்ந்து நிறைய கவிதைகள் படைத்திட வேண்டுகிறேன்.
பட்டாம் பூச்சியை என்ன தான் நாம் ஓடியாடி பிடித்து கைகளில் வைத்து அழகு பார்த்து ரசித்திருந்தாலும் புகைப்பட கலைஞர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அது வேறுபட்ட ரசனையை நமக்கு தரும். நான் இந்த விருதுகளை வழங்கப்போவது புகைப்பட க(வி)லைஞர்களுக்கு தான்.
ஜீவ்ஸ்:
இவரை பற்றிய அறிமுகமே தேவை இல்லை. இருந்தாலும் சில வரிகள். ஒரு காலத்தில் ஜோல்னா பையை மாட்டிக்கொண்டு மரத்தடியில் மாங்கு மாங்கென்று எழுதியவர் இன்று புகைப்பட கருவியை மாட்டிக்கொண்டு அழகழகான படங்களாய் எடுத்து வருகிறார்.
இராம்:
சின்னத்தல என்று செல்லமாக அழைக்கப்படும் வருத்தப்படாத வாலிபர். தனக்கென்று தனி பாணியில் புகைப்படங்கள் எடுத்து வருபவர். மிக அழகிய அபூர்வ பறவைகள் இவரின் பார்வையிலிருந்து தப்புவது கடினமே.
ஜெகதீசன்:
வளரும் புகைப்பட கலைஞர். கைத்தொலைபேசியில் மட்டுமே படமெடுத்து வந்தவர் புகைப்பட கலையின் மீது ஏற்பட்ட அதீத காதலால் அதிநவீன புகைப்படக்கருவிக்கு சொந்தக்காரராகி உள்ளார். எதிர் காலத்தில் இவரது படங்கள் பல விருதுகளை குவிக்கலாம்.
தொடர் விதிமுறைகளின்படி இவர்களும்,
1) பட்டாம் பூச்சியை தங்கள் வலைப்பதிவில் இணைக்கவேண்டும்.
2) தங்களுக்கு விருது தந்த அந்த நல்லவர்(களி)ன் முகவரியை இணைக்க வேண்டும்.
3) மூன்று பதிவர்களை விருதுக்கு தேர்ந்தெடுத்து முன்மொழிய வேண்டும்.
4) அவர்களுக்கு தங்கள் பதிவில் இணைப்பு கொடுக்கப்படவேண்டும்.
5) அவர்களின் பதிவுகளில் விருதுபெற்ற செய்தியை தெரிவிக்க வேண்டும்.
பட்டாம் பூச்சி தொடர்ந்து சிறகடித்து பறக்கட்டும்.
பட்டாம் பூச்சி விருதுகள்!
Labels: தொடர் பதிவு, பட்டாம் பூச்சி, விருது
Subscribe to:
Post Comments (Atom)

30 நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க:
வாழ்த்துக்கள்
தமிழ்மணத்துக்கு கூட அனுப்பலை....அதுக்குள்ள பின்னூட்டமா...அண்ணே முடியலை...:(
வாழ்த்துகள்
கண்கள் பனிக்கிறது
நெஞ்சம் இனிக்கிறது
நல்லா இருங்கண்ணே
வாழ்த்துகள்
அபூர்வ பறைவகளை எடுக்கும் கமெராக் கவிஞர்களுக்கு பட்டாம் பூச்சி விருது பொருத்தமானது தான் :-)
சும்மாவே பட்டாம்பூச்சிகளை கண்டால் விடமாட்டாங்க!
இப்போ அவார்டு வேற கொடுத்துடிங்களா!
வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்.
வாழ்த்துகள் அண்ணா!
விருது குடுத்தவரு இப்பத்தான் கேமரா வாங்கியிருக்காரு.
ஜீவ்ஸ் அண்ணா ஊரறிந்த புகழ்பெற்ற புகைப்பட கலைஞர்.
இராம் , ஜெகு ரெண்டு பேருமே கேமராக் கவிஞர்கள்.
இது என்னா புகைப்படக்காரர்களுக்கு கொடுக்கும் விருதா?
வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)
வாழ்த்துக்கள் அண்ணன்..!
அனைவருக்கும் வாழ்த்துகள் :)
[அய்ய்ய் எங்க ராமண்ணாவுக்கும் கிடைச்சிருக்கே]
நல்லா இருங்கண்ணே
நல்லா இருங்கண்ணே
/நட்புடன் ஜமால் said...
வாழ்த்துக்கள்/
நன்றி!
/மின்னல் said...
வாழ்த்துகள்/
நன்றி!
/Jeeves said...
கண்கள் பனிக்கிறது
நெஞ்சம் இனிக்கிறது
நல்லா இருங்கண்ணே/
கொரியரே...இதில் உள்குத்து எதுவும் இல்லையே....:)
/’டொன்’ லீ said...
வாழ்த்துகள்
அபூர்வ பறைவகளை எடுக்கும் கமெராக் கவிஞர்களுக்கு பட்டாம் பூச்சி விருது பொருத்தமானது தான் :-)/
நன்றி டொன் லீ..!
/வால்பையன் said...
சும்மாவே பட்டாம்பூச்சிகளை கண்டால் விடமாட்டாங்க!
இப்போ அவார்டு வேற கொடுத்துடிங்களா!
வாழ்த்துக்கள் உங்களுக்கும், உங்களிடமிருந்து பெற்றவர்களுக்கும்./
வால் அண்ணே....ரொம்ப நன்றி!
/சந்தனமுல்லை said...
வாழ்த்துகள் அண்ணா!/
நன்றி ஆச்சி!
/ ஜோசப் பால்ராஜ் said...
இது என்னா புகைப்படக்காரர்களுக்கு கொடுக்கும் விருதா?/
யாருக்கு வேண்டும் என்றாலும் கொடுக்கலாம் அண்ணே...:)
/ கோபிநாத் said...
வாழ்த்துக்கள் அண்ணாச்சி ;)/
நன்றி!
/தமிழன்-கறுப்பி... said...
வாழ்த்துக்கள் அண்ணன்..!/
நன்றி!
/Thooya said...
அனைவருக்கும் வாழ்த்துகள் :)/
நன்றி!
/ஜெகதீசன் said...
நல்லா இருங்கண்ணே/
உங்க ஆசிர்வாதம் அண்ணே...!
/ஜெகதீசன் said...
நல்லா இருங்கண்ணே/
உங்க ஆசிர்வாதம் அண்ணே...!
அன்று நன்று பாரதி - நல்வாழ்த்துகள் விருது பெற்றமைக்கு
எல்லாருக்கும் வாழ்த்துக்கள். :)
//பட்டாம் பூச்சியை என்ன தான் நாம் ஓடியாடி பிடித்து கைகளில் வைத்து அழகு பார்த்து ரசித்திருந்தாலும் புகைப்பட கலைஞர்களின் கண்ணோட்டத்தில் பார்க்கும் போது அது வேறுபட்ட ரசனையை நமக்கு தரும்///
சூப்பரூ!
சாதாரண புகைப்பட கலைஞர்களாக இருந்து நுட்பமாய் முன்னேறி கொண்டிருக்கும் நட்புக்களுக்கும் வாழ்த்துக்கள்!
வாடிய பயிரைக் கண்டு மட்டும் வாடவில்லை மூழ்கிய பயிரையும் கண்டு வாடினேன்.
பட்டாம் பூச்சி விருது பெற்றதற்கு உங்களுக்கு எனது இதயங்கனிந்த வாழ்த்துக்கள்!
வழமை போல் தமிழ்ப் பணி தொடரட்டும்.
தங்களால் விருது வழங்கப்பட்ட திரு ஜீவ்ஸ், இளவல்கள் சேகு,இராம் ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்!
எழுச்சி நாயகனா? கொஞ்சம் ஓவராத்தான் இருக்கு!
தல என்று சொல்லாதவரை என் தலை தப்பியது. :P
Nanni
Post a Comment