புது வருடத்தின் ஆரம்பமே மாற்றங்களுடன் ஆரம்பிக்கின்றது. நீண்ட நாட்களாக வசித்துவந்த பகுதி. அக்கம் பக்கத்தில் நிறைய பழகிய மனிதர்கள். வேலையிடத்துக்கு மிக அருகிலேயே வீடு. இவற்றை எல்லாம் பிரிந்து நாளை முதல் வேறொரு பகுதிக்கு வீடு மாறுகிறோம்.
கடந்த ஒருவாரமாக புது வீட்டிற்கு பொருட்களை கொண்டு செல்வதும் வருவதுமாக இருந்ததில் அருகில் வசிக்கும் ஒருசில முகங்களில் லேசான புன்னகைக்கீற்று தென்பட ஆரம்பித்திருக்கின்றது. கீழ் வீட்டில் பார்ப்பதற்கு புசு புசுவென்று வெள்ளைக்கலரில் முயல் குட்டி போன்று இருக்கும் பூனைக்குட்டி என்னையே சுற்றி வருகின்றது. இரண்டாவது தளத்திலேயே வீடு இருப்பதால் லிப்ட் பயன்படுத்துவது இல்லை. ஓவ்வொரு முறை படியேறி செல்லும் போதும் கூடவே வருகின்றது. மனிதர்களிடம் பழகுவதை விட விலங்குகளிடம் பழகுவது மிக எளிதாகவே இருக்கின்றது.
விலகிச் செல்லும் 2008 என்னைப்பொறுத்த வரையில் நல்ல ஆண்டாகவே விடைபெறுகிறது. நான் பதிவுலகுக்கு அறிமுகமானது இந்த ஆண்டில் தான். எனது பதிவுகள் எல்லாம் மொக்கையாக இருந்தாலும் வலைப்பூக்களின் வழியே நிறைய புதிய நல்ல நண்பர்களை எனக்கு அறிமுகப்படுத்திய ஆண்டு.
உலகளாவிய பொருளியல் மந்தத்தோடு பிறக்கும் புது வருடம் எப்படி இருக்கும் என்று கணிக்க இயலாத நிலையில் இருக்கிறது. உலகெங்கும் கதவடைப்புகளும் ஆட்குறைப்பும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. புது வருடத்தில் பொருளியல் வீழ்ச்சியில் இருந்து மீள ஒரு சேர பிரார்த்திப்போம்!
அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.
புது வருடம்...புதிய இடம்....புதிய மனிதர்கள்!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
35
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: நூறாவது பதிவு, புது வருடம், வாழ்த்து
''ஆசை வெட்கம் அறியும்'' - விகடன் கவனிக்குமா?
பகிரங்க கடித சீசன் திரும்பவும் ஆரம்பிச்சி இருக்கிறதால நாமும் கடிதமாக இல்லாவிட்டாலும் ஒரு பதிவாக எழுதிடலாம்னு களத்தில் இறங்கியாச்சு. நம்ம வால் அண்ணன் பாணியில் என்னோட இலக்கும் ஆனந்த விகடன் தான்.
விஷயம் ரொம்ப சாதாரணமானது தாங்க. விகடன் பொக்கிஷம்னு வாரவாரம் பழைய விகடன் பாணியில் ஒரு புத்தகம் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதில் ஜூலை மாதம் முதல் "ஆசை வெட்கம் அறியும்'' ன்னு மணியன் எழுதிய தொடர் வெளிவருகிறது. தொடர்ந்து வந்து கொண்டிருந்த தொடர் தீபாவளி சமயத்தில் ஒரு வாரம் காணாம போய்டுச்சி. சரி தீபாவளி செய்திகள் நிறைய இருக்கிறதால விட்டுட்டாங்க போலன்னு நினைச்சேன்.
அடுத்தடுத்த வாரங்களில் திரும்பவும் தொடர்ந்து அந்த தொடர் வெளிவந்தது. இப்ப திரும்பவும் இந்த வார விகடனில் காணாம போய்டுச்சி. விகடன் இப்படி கண்ணாமூச்சி காட்டுறதுக்கு காரணம் 'ஆசை வெட்கம் மட்டுமல்ல கண்ணாமூச்சியும் அறியும்' என்பதாலா?
தொடர் வெளிவந்த முதல் இதழ்!
தொடருடன் வெளிவந்த போனவார இதழ்!
தொடர் வெளிவராத இந்த வார இதழ்!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
27
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: விகடன்
கையெழுத்து - ஒரு பொக்கிஷம்!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
38
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: கையெழுத்து முயற்சி
உங்கள் பதிவு திருடு போகாமல் இருக்க ஒரு எளிய வழி..!!!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
43
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: மொக்கை ஒண்ணுமில்லை சும்மா
டேய்...மாப்ள அடங்கவே மாட்டியாடா நீ?
சின்ன குழந்தைங்க கூட இப்ப நல்லாவே சைக்கிள் ஓட்டுறாங்க. ஆனா நான் சைக்கிள் கத்துக்க ஆரம்பிச்சப்போ ஆறாம் கிளாஸ் தாண்டி ஏழாம் கிளாஸ்ல அடி எடுத்து வச்சிருந்தேன். அப்போதைக்கு நான் இருந்த உயரத்துக்கு நேரா சீட்ல உக்காந்தே ஓட்டி இருக்கலாம். ஆனாலும் பயம் யாரை விட்டுச்சு. அதனால குரங்கு பெடல் தான். அதுக்கே உடம்பு பூரா ஏகப்பட்ட அடி.
அடிமேல அடி வாங்கினாலும் விடாம பழகியதில் குரங்கு பெடலில் இருந்து கம்பிக்கு தாவி இருந்தேன். கம்பியில் நின்னுகிட்டே தான் ஓட்டுவேன். சீட்டில் உக்கார ரொம்ப பயம். இப்படியே கொஞ்ச நாள் ஓடிச்சு. அப்ப தான் எங்க தாத்தா பழைய சைக்கிளை வித்துட்டு புது சைக்கிள் வாங்கினார். புது சைக்கிளை எங்கயாவது கொண்டுபோய் போட்டு உடைத்து விடுவேன்னு என்னை தொடவே விடுறதில்லை.
எங்க தாத்தா வெளியூர் போயிருந்த சமயத்தில் எங்க பாட்டி கிட்ட கெஞ்சி சாவி வாங்கி புது சைக்கிளை எடுத்துகிட்டு கிளம்பினேன். அப்ப எங்க பாட்டி சரி நீ ஊரு சுத்தாம முதலில் எனக்கு கொஞ்சம் உளுந்தும் பெருங்காயமும் கடைத்தெரு வரைக்கும் போய் வாங்கிட்டு வந்துடுன்னு சொன்னாங்க. சொன்ன அடுத்த நிமிடமே சைக்கிளில் பறந்துகிட்டு இருந்தேன். புது சைக்கிள்ங்கிறதால செம வேகம். ஒரு திருப்பத்தில் சைக்கிளை திருப்புறதுக்கு பதிலா நேரா கொண்டுபோய் பாதி வெட்டு பட்டு கிடந்த மரத்துல விட்டுட்டேன்.
விழுந்தது மட்டும் தான் தெரியும். கண் முழிச்சி பார்த்தா ஹாஸ்பிட்டலில் அட்மிட் ஆகி இருக்கேன். காலில் உயிர் போற வலி. காலை அசைக்கவே முடியலை. முழங்காலுக்கும் தொடைக்கும் நடுவில் உள்ளங்கை அளவுக்கு சதையை உடைந்த மரக்கிளை குத்தி கிழிச்சி எடுத்திடுச்சாம். எக்கச்சக்க தையல். இரண்டு வாரம் ஹாஸ்பிட்டலில் தான் இருந்தேன். அப்ப என்ன பார்க்கிறதுக்கு எங்க மாமா வந்தார்.
எப்படி நடந்துச்சுன்னு பாட்டிகிட்ட விசாரிச்சிட்டு ஒரு கமெண்ட் அடிச்சார். அதை என்னைக்குமே மறக்க முடியாதுங்க. என்ன கமெண்ட்ன்னு தானே கேக்குறீங்க. இவ்ளோ சொன்ன நான் அதை சொல்லாம போவேனா..அது வேற ஒன்னும் இல்லைங்க. டேய்...மாப்ள அடங்கவே மாட்டியாடா நீ...எதை சொன்னாலும் ஏட்டிக்கு போட்டியா தான் செய்வேன்னு தெரியும்..அதுக்காகத்தான் உளுந்து பெருங்காயம் வாங்கிட்டு வரச்சொன்னதுக்கு விழுந்து பெருங்காயம் வாங்கிட்டு வந்தியாக்கும்ன்னு கேட்டாருங்க
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
40
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
தெரிந்தும்....தெரியாமல்....!

முதன் முதலாய் நடக்கிற நிகழ்வுகள் என்றும் எண்ணத்திரைகளில் இருந்து கொண்டே தான் இருக்கும்....அப்படி ஒரு நிகழ்வு தான் நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது எடுத்துக்கொண்ட புகைப்படம். பள்ளிப்பருவத்தில் நான் எடுத்துக்கொண்ட ஒரே புகைப்படம்னு சொல்லலாம். எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுக்கலாம்னு சொல்லி தேதியும் குறித்த நாளில் வந்தது 12 பேர் மட்டுமே. அதிலும் பெண்கள் யாரும் வரவே இல்லை. அப்படி எடுத்த படமும் எப்படியோ காணாம போய்டுச்சி.
இந்தமுறை இந்தியா சென்றிருந்த போது நிஷா புயல் படுத்தி எடுத்ததில் ஒருவார காலம் எங்கும் செல்ல முடியாமல் வீட்டிலேயே அடைபட்டு கிடக்கவேண்டிய சூழ்நிலை. சும்மா இருந்த நேரத்தில் பழைய குப்பைகளை எல்லாம் கிளறியதில் காணாமல் போன புகைப்படம் கிடைத்தது. சந்தோஷத்தோடு கொஞ்சம் வருத்தமும் சேர்ந்தே இருந்தது.
புகைப்படம் எடுக்கும் அன்று வராதவங்க யாருடைய பேரும் இன்று நினைவில் இல்லை. ஆனால் படத்தில் உள்ள எல்லோருடைய பேரும் இன்றும் நினைவில் இருக்கிறது. பெயர்கள் மட்டுமே தெரிகின்றது ஆனால் அவர்கள் எல்லோரும் எங்கு எப்படி இருக்கின்றார்கள் என்று தெரியாமலே.
என்னைய மாதிரி இந்த புகைப்படத்தில் உள்ளவங்களும் மொக்கை பதிவராகவோ அல்லது நம்ம ஆயில் அண்ணாச்சி மாதிரி கேரளத்து பைங்கிளி ஆயில்யாவின் அகில உலக ரசிகர் மன்ற தலைவராகவோ இருக்கலாம்....இல்லைன்னா தமிழ்பிரியன் மாதிரி தொழில்நுட்ப புலியா கூட இருக்கலாம்...அப்படி யாரும் இருந்தா பின்னூட்டத்துல சொல்லிட்டு போங்க..!!
இந்த புகைப்படத்தில் என்னை சரியாக அடையாளம் காட்டுபவர்களில் ஒருவரை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்து நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி அவரோட Nikon D80 கேமராவை அன்பளிப்பா கொடுக்கிறதா சொல்லி இருக்கார்....யார் அந்த அதிர்ஷ்டசாலியோ?
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
62
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: நினைவுகள், பள்ளி, புகைப்படம்

