
இன்று திருமண நாளை கொண்டாடும் புதுகைத்தென்றல் அக்காவிற்கு மனமார்ந்த மணநாள் வாழ்த்துக்கள்!
இனிய திருமணநாள் வாழ்த்துக்கள் புதுகைத்தென்றல்!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
14
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: வாழ்த்து
கேக்கவே ரொம்ப சந்தோஷமா இருக்கு...!
கேளுங்க கேளுங்க கேட்டுகிட்டே இருங்க. கேக்குறதுக்கு என்னவோ சந்தோஷமா தான் இருக்கு.....ஆனா நிஜத்தில் முழி பிதுங்குது. வேற ஒண்ணும் செய்றதுக்கு இல்ல கேக்கிறதை தவிர.
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
16
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: மீள் பதிவு
வெண்பா வாத்தியாரின் புதிர் மோகம்!
நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சியை உங்களில் பலருக்கும் தெரிஞ்சி இருக்கும். மரத்தடியில் ஆரம்பித்த அவருடைய பயணம் ஏகப்பட்ட பரிமாணங்களை கொண்டதுன்னும் தெரிஞ்சி இருக்கும். வெண்பா மேல ரொம்ப அலாதியான மோகம் கொண்டவரு. அவரு கொண்ட மோகம் எப்படிப்பட்டதுன்னா ஆபீஸ் போயிட்டு இருக்கும் போது சிக்னல்ல கிடைக்கிற நிமிஷ கேப்ல கூட வெண்பா யோசிச்சி சிக்னல் விழுந்தது கூட தெரியாம பின்னால் உள்ளவங்க கிட்ட திட்டு வாங்கிட்டு போற அளவுக்கு பிரபலம்.
அப்புறம் என்ன ஆச்சுதோ தெரியல வெண்பாவை ஒரு ஓரமா கடாசிட்டு கேமரா மேல தீராத காதல் கொள்ள ஆரம்பிச்சாரு. புரபொஷனல் கேமரா வாங்கி மரம் செடி கொடியில் ஆரம்பித்து ஓடுறது ஆடுறது பறக்கிறதுன்னு ஒண்ணு விடாம படமா எடுத்து தள்ளினார். மேக்ரோ லென்ஸ் வாங்கினதை வெளி உலகுக்கு காமிக்க ஒரு எறும்பை கொன்னு அதை பெரிய டினோசர் கணக்கா படம் பிடிச்சார்ன்னா பார்த்துக்கோங்க.
புகைப்படக்கலைல ஜீவ்ஸ் அடுத்த கட்டத்துக்கு போவதை ஆர்வமா எதிர்பார்த்திட்டு இருக்கும் போது புரபொஷனல் கேமராவை தூக்கி பரண் மேல போட்டுட்டு பாக்கெட்ல இருக்கிறது கூட தெரியாத அளவுக்கு ஒரு பாய்ண்ட் அண்ட் ஷூட் கேமரா வாங்கனும்னு சொன்னாரு. என்ன ஆச்சு இந்த மனுஷனுக்குனு யோசிச்சிட்டு இருக்கும் போது தான் அவரோட பதிவு கண்ணுல பட்டுச்சு.
புதிர் போட ஆரம்பிச்சி இருக்காரு. இது எவ்ளோ நாளைக்குன்னு தெரியலை. ஆனா கொஞ்சமா நம்ம மூளைக்கு வேலை கொடுக்கிற அவரோட புதிர்கள் ரொம்ப நல்லாவே இருக்கு. நீங்களும் நேரம் கிடைக்கும் போது அவரோட புதிருக்கு சென்று பாருங்க.
புதிருக்கான சுட்டி:
உங்களுக்கான சவால்.. முடியுமா உங்களால்?
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
24
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: ஜீவ்ஸ் புதிர்
பனை ஓலைப்பாய்!
ஓலைப்பாய் பார்த்திருக்கின்றீர்களா? கிராமங்களில் பெரும்பாலானவர்களின் வீடுகளில் பனை ஓலையில் பின்னப்பட்ட பாய் வைத்திருப்பார்கள். நெல் மற்றும் ஏனைய தானியங்களை வீட்டின் முற்றத்தில் உலர்த்துவதற்கு பனை ஓலைப்பாயை பயன்படுத்துவார்கள்.
பனைமர குருத்து மட்டையாக விரியும் முன் வெட்டி நிழலில் உலர்த்தி தனித்தனி ஓலையாக பிரித்து எடுத்து சின்ன ஓலைகளை கழித்துகட்டிவிட்டு ஒரே அளவிலான பெரிய ஓலைகளை சேர்த்து வைத்துக்கொண்டு ஓய்வான நேரத்தில் பாய் பின்னுவார்கள்.
தேவைக்கு ஏற்ப சிறிய மற்றும் பெரிய அளவிலான பாய் பின்னுவார்கள். பயன்பாட்டுக்கு பின் ஒரு பக்கத்தில் இருந்து சுருட்டி கட்டி வைத்து விடுவார்கள். மறுமுறை தேவைப்படும் போது அதை விரிப்பது கொஞ்சம் சிரமமான காரியம். ஒரு பக்கத்தில் இருந்து விரித்துக்கொண்டே வந்தால் மறுபக்கத்தில் இருந்து சுருண்டு கொண்டே வரும்.
சரி எதுக்கு இவ்ளோ கதை எல்லாம்னு நீங்க கேக்க நினைக்கிறது புரியுது. சரி விஷயத்துக்கு வருகிறேன். வைகைப்புயல் ஓலைப்பாயை விரிக்கிறேன் பேர்வழின்னு என்ன நிலைக்கு ஆளாகிட்டார்னு நீங்களே பார்த்து தெரிஞ்சுக்குங்க!
நாங்க எல்லாம் ஊருக்குள்ள பலபேருக்கு யோசனை சொல்லுறவய்ங்கன்னு கிளம்பி வைகைப்புயல் ரேஞ்சுக்கு யாரும் ஆளாகிடாதீங்க. அவ்ளோ தான் சொல்வேன்!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
26
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: ஓலைப்பாய் நகைச்சுவை
தமிழில் எழுதி போரடிச்சிடுச்சி..!
தமிழில் எழுதி போரடிச்சிடுச்சி..அதனால நான் இப்போதைக்கு ஹிந்திக்கு என்னோட எழுத்து சேவையை விரிவு பண்ணி இருக்கேன்...அப்படியே இதுக்கு கிடைக்கிற வரவேற்பை பார்த்திட்டு மலையாளம் தெலுங்கு ஒரிய மொழின்னு போய்ட்டே இருக்கலாம்னு ஒரு பெரிய ப்ளான் போட்டு வச்சிருக்கேன்.
மறக்காம என்னோட ஹிந்தி பதிவுக்கு வாங்க!
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
60
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: மொக்கை
"And, Now..."

கழுத்தில் மாட்டும் ஸ்ட்ராப் இல்லாத
பைனாகுலர் ஒன்று இருந்தது என்னிடம்!
பள்ளிவிட்டு வந்ததும்
கண்ணாடி இல்லாத ஜன்னல் வழி
தொலைதூர தெருக்களில்
பிகர் பார்த்துக்கொண்டிருப்பேன்!
வெகு சுவாரசியமாக இருந்தது வாழ்க்கை!
எப்படியோ தொலைந்துபோனது அந்த பைனாகுலரும் ஒருநாளில்...
அத்துடன் என் ஃபிகரும்....!
ஏன் இப்பூடின்னு இங்க போய் பாருங்க
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
50
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: மொக்கை
காதல் கறுப்பி!
கறுப்புத்தங்கமே
இளையநிலாவே
உலக நாயகனே
காதல் கறுப்பட்டியே!
கடற்கரை மணலில்
பௌர்ணமி நிலவில்
காதலி நினைவில்
கவிபாடிடும் காதல்கறுப்பியே!
மனங்களை படிப்பதில்
தன்னிகரில்லா தலைவனே!
மலையழகை வடிப்பதில்
தற்பெருமையற்ற கவியே!
காதல் கோலங்களில்
கயல்விழி வரைந்தவனே!
காதல் கடிதங்களில்
கால் கொலுசு வடித்தவனே!
பூவரசம்பூ பூத்தபோதெல்லாம்
புனைவுகள் எழுதியவனே!
பூக்கள் வாடினாலும்
தான் வாடாதவனே!
ஒரு பெண்மையிடம்
ஒப்புக்கு தோற்றவனே!
இப்புவிதனில் மாசற்ற
தமிழ்க் குலவிளக்கே!
சொற்களின் சேகரிப்பில்
வசீகரங்கள் விதைத்தவனே!
உரையாடல் போட்டியின்
வெற்றி நாயகனே!
கும்மிப்பா பாடி மகிழ்கையில்
உன் வாழ்வும் சிறந்திட
வேண்டிடும் நெஞ்சங்கள்
காதல் கறுப்பட்டி ரசிகைகள்!
ஆக்கம்:
நிஜமா நல்லவன்
ஊக்கம்:
தமிழ் பிரியன்
ஆயில்யன்
சென்ஷி
பெரியபாண்டி-சக்கரைப்பட்டி
பதிவு செய்தது
நிஜமா நல்லவன்
59
நல்லவங்க மனசுல பட்டத சொல்லிஇருக்காங்க
Labels: காதல் கறுப்பட்டி, கும்மி, பதிவர் அறுங்கோணம்

